திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சிறுபான்மை மக்கள் அதிகம் வாழக்கூடிய பகுதியான 40 ஆவது வார்டு பகுதியில் சாலை வசதி கழிவுநீர் ஓடை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டுகளை கொண்ட மாநகராட்சி ஆகும். குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சிக்காலத்தில் பெரும்பான்மையான வார்டுகளில் போதிய குடிநீர் சாலை வசதி மற்றும் கழிவுநீர் ஓடைகள் பராமரிப்பு போன்றவை சரியாக நடைபெறவில்லை என பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டி வந்தனர். தற்போது மாநகராட்சிக்கு உட்பட்ட சிறுபான்மை மக்கள் அதிகம் வாழக்கூடிய பகுதியான பேகம்பூர் 40 வது வார்டு கரீம் நகர் பின்புறம் உள்ள பகுதிகளில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதி, கழிவுநீர் ஓடை பராமரிப்பு மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்தல் போன்ற அடிப்படைத் தேவைகளை கூட மாநகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது அப்பகுதி மக்கள் தானாகவே முன்வந்து வீடியோ பதிவு செய்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ பதிவானது இணையத் தளங்களின் வைரல் ஆகி வரும் நிலையில் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது .

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.