மகளிர் கல்லூரியில் மாணவியர்களுக்கான மன்றங்கள் தொடங்கப்பட்டது. பாலக்கோடு டி.எஸ்.பி. மாலதி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் மாட்லாம்பட்டி சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில், மாணவிகளுக்கான மன்றங்கள் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் சக்திகைலாஷ் மற்றும் ஏ.வி.எஸ். நிறுவனங்களின் தலைவர் கே.செந்தில்குமார் மற்றும் கல்லூரி செயலாளர் கே.ராஜவிநாயகம் ஆகியோர் தலைமையேற்றனர். கல்லூரி முதல்வர் வரவேற்புரை வழங்கினார்.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக  பாலக்கோடு காவல்துறை துணைகண்காணிப்பாளர் டாக்டர் மாலதி அவர்கள் கலந்து கொண்டு மன்றங்களைத் தொடங்கி வைத்தார்.

என்.எஸ்.எஸ்.,ஒய்.ஆர்.சி., ரோட்டரி கிளப், 10-க்கும் மேற்பட்ட பல்வேறு மன்றங்களை தொடங்கி வைத்தார் மேலும், ஒவ்வொரு மன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் உறுதிமொழி ஏற்று பதவியேற்றனர்.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவியர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டு, அவர்கள் உறுதிமொழியுடன் பதவியேற்றனர்.
சிறப்பு விருந்தினர் அவர்கள் ஒவ்வொரு மன்றத்தின் நோக்கங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். கல்வியின் முக்கியத்துவம், பெண்களின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஆற்றல், துணிவு, தனித்திறமை மற்றும் தன்னதிப்பு ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு, பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.

இவ்விழாவில் அனைத்து துறைகளைச் சேர்ந்த மாணவிகளும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இறுதியாக, கல்லூரியின் துணை முதல்வர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

Related

“வங்கி ஊழியர்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்”