கடலூர் : கடலூர் புதிய பேருந்து நிலையத்தை எம் புதூரில்  கட்டப்பட்டுள்ள இடத்திலேயே திறக்க வலியுறுத்தி  எம். புதூர் பேருந்து நிலையம் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் கடலூர் வெள்ளகரை தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு எம்.புதூர் புதிய பேருந்து நிலைய ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளரும்,அகில பாரத சத்திரிய மகா சபை தென்னிந்திய தலைவருமாகிய  இரா. காத்தமுத்து தலைமை தாங்கினார். இராமாபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தரணிதரன் மற்றும் ஒதிடிக்குப்பம் சீதாராமன்  முன்னிலை வகித்தனர்.அகில பாரத சத்திரிய மகா சபை மாநில தலைவர் எம். புதூர் த. சக்திவேல் வரவேற்புரை யாற்றினார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு, புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது அறிக்கையில் தமிழக அரசின் பழைய திட்டங்கள்  எதுவும் ரத்து செய்யப்பட மாட்டாது என தெரிவித்தார். ஆனால் எம். புதூர் புதிய பஸ் நிலையம் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில் திறப்பு விழா நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். உடனடியாக எம்.புதூரில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

வரும் திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ராமாபுரம், சாத்தான்குப்பம்,வெள்ளக்கரை ஓதியடிகுப்பம் உள்ளிட்ட சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தித்து மனு அளிப்பது எனவும்,மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு ப. ராஜ்குமார் அவர்களை சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. 

20 கிராமங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள்  கடலூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு  என்.ஆனந்த் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதென முடிவு செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எம்.புதூர் புதிய பேருந்து நிலைய ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளராக இரா.காத்தமுத்து, இணை ஒருங்கிணைப்பாளர்களாக ராமாபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தரணிதரன், ஒதயடிகுப்பம் சீதாராமன், எம். புதூர் சக்திவேல், அருள்நாதன், வி.காட்டு பாளையம், தனஜெயன், கிழக்கு ராமாபுரம் ராஜதுரை, சாத்தான் குப்பம் மணி ,வண்டிக்குப்பம் சக்திவேல், வெள்ளகரை முருகன், மேற்கு ராமபுரம் துரைசாமி, ராமாபுரம் ஏழுமலை, எம்.புதூர் பெரியசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.அடுத்த வார இறுதியில் எம் புதூர் பேருந்து நிலைய ஒருங்கிணைப்பு குழுவை பதிவு செய்வது என முடிவு செய்யப்பட்டது,

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எம். புதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அருள்நாதன்,  பெரியசாமி, ஸ்ரீதர், ஆறுமுகம், கிருஷ்ணன், ராமாபுரம் ராஜதுரை, குறவன்பாளையம் ராஜேந்திரன், ஆண்டியாதோப்பு அன்பரசன், பெரிய காட்டு பாளையம் பிரபாகரன், தனஞ்செயன், சதானந்தம் , சுகுமார், சம்பத்குமார், ஆனந்த செல்வம், வண்டி பாளையம் நடராஜன், சுந்தர்ராஜன் ,சாத்தகுப்பம் மணி ,வண்டி குப்பம் ராமதாஸ், சக்திவேல், மேற்கு ராமாபுரம் துரைசாமி, கீரப்பாளையம் அருள் ஜோதி, வெள்ளைக்கரை ரமேஷ், முருகன், மற்றும் பல கிராமங்களில் இருந்து முக்கியஸ்தர்கள்  கலந்து கொண்டனர்.  எம். புதூர் பெரியசாமி நன்றி கூறினார்.

Related

“கிருஷ்ணகிரியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ”