சென்னை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழக இஸ்லாமிய மக்களுக்கு ஆயிஷாம்மா ஆட்டுப் பண்ணை நிறுவனம் அறிவித்த இலவச உம்ரா பயண திட்டத்திற்கான குலுக்கல் நிகழ்ச்சி  அமைந்தகரையில் உள்ள ஜமாத் மஹாலில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 100 பேரை இலவசமாக புனித பயணம் அழைத்துச் செல்லும் இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 ஆயிஷாம்மா ஆட்டுப் பண்ணை சார்பில், வரும் பக்ரீத் பண்டிகைக்காக முன்கூட்டியே ரூ.9,000 செலுத்தி ஆடு முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவச உம்ரா பயணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்திருந்தனர்.

அனைத்து பதிவாளர்களின் பெயர்களும் குலுக்கல் கூண்டில் இடப்பட்டு, நேர்மையான முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இன்று நடைபெற்ற முதல்கட்ட குலுக்கலில் மொத்தம் 25 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 75 பேருக்கான குலுக்கல் அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெறும் என நிறுவன நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆயிஷாம்மா ஆட்டுப் பண்ணை நிர்வாக உரிமையாளர் முகமது சித்திக் இதுகுறித்து கூறுகையில், "பக்ரீத் பண்டிகை என்பது தியாகத்தின் அடையாளம். அந்த பண்டிகையை முன்னிட்டு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இஸ்லாமியர்களின் புனித கனவான உம்ரா பயணத்தை நிறைவேற்றும் வாய்பாகவும் இந்த திட்டத்தை அறிவித்தோம். தமிழகம் முழுவதும் 100 பேரை நாங்கள் இலவசமாக மெக்கா, மதினா அழைத்துச் செல்வோம். இன்று முதல் 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயண ஏற்பாடுகள் விரைவில் தொடங்கும்" என்றார்.

Related

“பூட்டி இருந்த வீட்டை உடைத்து நகை, வெள்ளிப் பொருட்கள் கொள்ளை : போலீசார் விசாரணை”