சென்னை ஆதம்பாக்கம் ஏரி நீர் பரப்பு அருகே ஜீவன் நகர் 5வது தெருவில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியின் நீர்பரப்பு பகுதியில் வீடு கட்ட கட்டுமான பணிகள் நடப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து ஆலந்தூர் எம்.எல்.ஏ. எம். ஹரீஷ், ஆலந்தூர் தாசில்தார் நாகஜோதி நீர் வளத்துறை உதவி பொறியாளர் பிரஸ்னேவ் பிரபு ஆகியோருடன் ஆய்வு செய்தார். அப்போது நீர் பிடிப்பு பகுதியில் வீட்டினை கட்ட நான்கு தூண்கள் அமைக்கப்பட்டு இருந்ததை கண்டனர்.
ஏரி அருகே உள்ள கட்டுமானத்தை உடனே அகற்ற அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. ஹரீஷ் உத்தரவிட்டார். இதையடுத்து ஜே.சி.பி. மூலம் கட்டுமான தூண்கள் இடித்து அகற்றப்பட்டன. அங்கு ஒருவர் தனக்கு சொந்தமான இடம் என வைத்திருந்த போர்டும் அகற்றப்பட்டது.
இந்த ஆக்கிரமிப்பு ஆகற்றும் பணியின் போது மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் சுரேந்தர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.