தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில், தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, போதை இல்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் உத்தரவின்பேரில், மண்டல அலுவலர் ராஜ்குமார் வழிகாட்டுதலின்படி, முதன்மை வருவாய் அலுவலர் ஸ்டாலின் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், போதைப் பழக்கத்தால் ஏற்படும் உடல்நலம், குடும்பம் மற்றும் சமூக ரீதியான பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, போதைப் பொருட்களைத் தவிர்ப்பதுடன், போதைப் பழக்கத்திற்கு எதிராக பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

போதைப் பொருட்களின் பயன்பாட்டைத் தடுப்பதிலும், இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து பாதுகாப்பதிலும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

Related

“திருவில்லிபுத்தூர் வட்டாரப் பகுதிகளில் அரசின் திட்டங்கள் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்த ஆட்சித் தலைவர் ஷரண்யா!”