மண்ணிவாக்கம் பெரி கலை மற்றும் அறிவியல் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 150 ஆசிரியர்களுக்கு தமிழக சட்டபேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் பெரி பெருமை விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
சென்னை தாம்பரம் மண்ணிவாக்கம் பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் 'ஆசிரியர் தின விழா'வை சிறப்பிக்கும் வகையில் "பெரி பெருமை விருதுகள்" வழங்கும் விழா நிகழ்வு சீட்டா கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெரி கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் மாண்பமைத்தலைவர் சரவணன் பெரியசாமி, தலைமைச் செயல் அலுவலர் சசிவீரராஜன் ஆகியோர் தலைமைத் தாங்கினர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக சட்டபேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருந்து தெர்ந்தெடுக்கப்பட்ட
நூற்று ஐம்பது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரிகள், ஆசிரியர்களுக்கு பெரி பெருமை விருதுகளை சிறப்பு விருந்தினர் ஜே.சி.டி.பிரபாகரன் வழங்கி கௌரவித்தார்.
இவ்விழா நிகழ்வில் பெரி கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், துறைத்தலைவர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், நிர்வாக அலுவலர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெரி கல்வி குழும தலைவர் சரவணன் பெரியசாமி கூறும்போது இரண்டாவது ஆண்டாக பெரி கல்வி குழுமம் இந்த ஆசிரியர்கள் பெரி பெருமை விருதினை வழங்கி வருகிறது. இந்த விருதுகள் இந்த கல்லூரி மாணவர்கள் மூலமகாவே சிறந்த ஆசிரியர்களை தெர்ந்தெடுத்து விருது வழங்குவது பெருமைக்குரியது என்றார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.