வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில்மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து
தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தெற்கு வட்டார துணை ஆணையாளர் அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-151, ஆற்காடு சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள், ஆலந்தூர்மண்டலம், வார்டு-163, பழண்டியம்மன் கோயில் தெருவில் சேவைத்துறைகளின் சாலை வெட்டுப் பணிகள் முடிவுற்று அங்கு மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளள சாலை சீரமைப்புப் பணிகள், அடையாறு மண்டலம்வார்டு-170, பொன்னியம்மன் கோயில் தெருவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் வார்டு-173, காந்தி நகரில் உள்ள மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், ஆலந்தூர் மண்டலம், வார்டு-163, ஆதம்பாக்கம், மேடவாக்கம் நெடுஞ்சாலையில் அம்மா உணவகத்தினைப் பார்வையிட்டு, அங்குள்ள சமையலறை, உணவுப் பொருட்களின் இருப்பு, குடிநீரின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அங்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ச்சியாக, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-144, நெற்குன்றம், சன்னதி தெரு, ஆலந்தூர் மண்டலம், வார்டு-158இராமசாமி நகர் மற்றும் அடையாறு மண்டலம், வார்டு-180, திருவான்மியூர், பாரதிதாசன் தெரு ஆகியவற்றில் செயல்பட்டு வரும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களைப் பார்வையிட்டு, உணவின் தரம், உணவுப் பொருட்களின் இருப்பு, சமையலறை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, மண்டல அலுவலர்கள் எஸ்.முருகதாஸ், என்.தட்சிணாமூர்த்தி, என்.காளிதாஸ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.