இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியக் கமிட்டி முடிவின்படி, கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஆர்.கே.நகர் பகுதிக்குழு சார்பில் ஆகஸ்ட் 13ஆம் தேதி தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகிலுள்ள ஜீவா பூங்காவில் மக்கள் சந்திப்பு பிரச்சார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்வுக்கு பகுதி செயலாளர் எம். ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார்.
இந்த நிகழ்வை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா. பெரியசாமி தொடங்கி வைக்கிறார்.
முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.எஸ். மூர்த்தி, மாவட்ட செயலாளர் டி.கே. வெங்கடேஷ் வேம்புலி, மாவட்டக்குழு உறுப்பினர் மோ. ரேணுகா எம்.சி., மாவட்டக்குழு உறுப்பினர் ஏ. இராமலிங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் எம். காவிரி செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
நிகழ்வில் மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியக் கமிட்டி முடிவின்படி, கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, தண்டையார்பேட்டை காவல் நிலையம் அருகே ஆர்.கே.நகர் பகுதிக்குழு சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்வுக்கு பகுதி செயலாளர் எம். ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார்.
இந்த நிகழ்வை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா. பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.எஸ். மூர்த்தி, மாவட்ட செயலாளர் டி.கே. வெங்கடேஷ் வேம்புலி, மாவட்டக்குழு உறுப்பினர் மோ. ரேணுகா எம்.சி., மாவட்டக்குழு உறுப்பினர் ஏ. இராமலிங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் எம். காவிரி செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
நிகழ்வில் மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.