சென்னை: தாம்பரம் அருகே மாநகர பேருந்து ஓட்டுனருக்கு மயக்கம் ஏற்பட்டதால் பேருந்து நிலையத்திற்குள் பேருந்து புகுந்ததால் அதிர்ஷடவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

அடையாறில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி மாநகர அரசு பேருந்து 25 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அதனை ஓட்டுனர் இன்பராஜ் (36) இயக்கி வந்துள்ளார். அப்போது கிழக்கு தாம்பரம் அருகே கட்டுபாட்டை இழந்த பேருந்து, பேருந்து நிலயத்தில் மோதியதில் முன் டயர் வெடித்தது. இதனை கண்ட பேருந்து நிறுதத்தில் இருந்த பயணிகள் அலறி கொண்டு ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கபட்டது.

தகவல் அறிந்து வந்த பள்ளிகரனை போக்குவரத்து புலனாய்வு போலீசார் நடத்திய விசாரனையில் திடீரென ஓட்டுனர் இன்பராஜ்க்கு  மயக்கம் ஏற்பட்டதால் விபத்து நடைபெற்றது தெரியவந்தது. உடனடியாக இன்பராஜை மீட்ட போலீசார் சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பேருந்தை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.

Related

“கிருஷ்ணகிரியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ”