ஆலந்தூரில் முன்னாள் முதல்வர் பேரறி்ஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா சிலைக்கு அதிமுக பகுதி செயலாளர் கோபாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
தமிழகம் முழுவதும் பேரறிஞர் அண்ணாவின் 118வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஆலந்தூர் கத்திப்பாராவில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு ஆலந்தூர் பகுதி அதிமுக செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான வி. கோபாலகிருஷ்ணன் மாலை அணிவித்தார். அவருடன் வட்ட செயலாளர்கள் பால்கிருஷணன், ராஜேந்திரபாபு, கமால், ரஞ்சித், பாலாஜி தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் ஆலந்தூர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related

“திருவில்லிபுத்தூர் வட்டாரப் பகுதிகளில் அரசின் திட்டங்கள் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்த ஆட்சித் தலைவர் ஷரண்யா!”