முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவில், ராயபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, 48-வது தெற்கு வட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் அன்பு கே. ஆறுமுகம் தலைமை வகித்தார். ராயபுரம் பகுதி கழகச் செயலாளர் ஏ.டி. அரசு முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர் மற்றும் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் டி. ஜெயக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவருடன் தலைமைக்கழகப் பேச்சாளர் நடிகை பபிதாவும் சிறப்புரையாற்றினார்.
மேலும், கழக அமைப்புச் செயலாளர் ராயபுரம் ஆர். மனோ, கழக வழக்கறிஞர் பிரிவு தலைவர் சேதுராமன், மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் எம்.எம். கோபி, தலைமைக்கழக இளம் பேச்சாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாருக்கு, 48-வது தெற்கு வட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் அன்பு கே. ஆறுமுகம் சார்பில் ஆளுயர மாலை அணிவித்து, தலையில் கிரீடம் சூட்டி, வீரவாள் பரிசாக வழங்கி கௌரவித்தார்.
இதில் ராயபுரம் பகுதி மேற்கு கழகச் செயலாளர் மகேஷ், திரு.வி.க. நகர் வடக்கு பகுதி கழகச் செயலாளர் முகுந்தன் கோபால், திரு.வி.க. நகர் தெற்கு பகுதி கழகச் செயலாளர் பரமகுரு, மாணவர் அணி மாவட்டச் செயலாளர் பா. சங்கர், மாவட்டக் கழக அவைத் தலைவர் போஸ், மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் உதயன், மாவட்டக் கழகப் பொருளாளர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.