ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர் ஏகாம்பர டபேதார் தெருவில் 4 மாடி கட்டிடம் உள்ளது. முறையான அனுமதி பெற்றும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு உள்ளதாக மாநாகராட்சி சார்பில் நோட்டீஸ் தரப்பட்டது. இந்த நிலையில் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து சென்னை மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் ஆலந்தூர் மண்டல செயற்பொறியாளர் மணிமொழி, 160வது உதவி பொறியாளர் ஸ்டீபன் மற்றும் மாநாகராட்சி ஊழியர்கள் சென்று 4 மாடி கட்டிடத்திற்கு சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.