ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர் புது தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.
ஆலந்தூர் மண்டல உதவி கமிஷ்னர் முருகதாஸ் தலைமை தாங்கினார். வருவாய் உதவி அலுவலர் கண்ணன், செயற்பொறியாளர் மணிமொழி முன்னிலை வகித்தனர்.
முகாமை தொடங்கி வைத்த ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம். ஹரிஷ் மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். சுமார் 300க்கும் மேற்பட்ட ம்னுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார். இதில் சென்னை மாநாகராட்சி, சுகாதார துறை, வருவாய் துறை, உணவு வழங்கல்துறை, மின்சார வாரியம், பொது பணித்துறை, நெடுஞ்சாலை துறை உள்பட 10க்கும் மேற்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.