தூத்துக்குடி: மனைவியின் கள்ளக்காதலன் தனது 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது மகளையும் பாலியல் தொந்தரவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி கிராமத்தைச் சார்ந்தவர் தங்க குமார். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர்  தனது தாய் சுடலைமாடியுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வருகை தந்து புகார் ஒன்றை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தனது மனைவி முத்து செல்வியுடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், தங்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் அதில் இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளதாக தெரிவித்த அவர், தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து அவரது தாய் மாமாவின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மாமுனியபுரத்தில் வசித்து வந்ததாகவும்,  அவருக்கும் அவரது வீட்டு அருகில் உள்ள முத்து முருகன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு தொடர்ந்து அவர்கள் பல ஆண்டுகளாக உல்லாச வாழ்க்கை அனுபவித்து வந்ததாகவும் கேறினார்.

இந்நிலையில் தனது 13 வயது மகள் விளாத்திகுளம் வேடப்பட்டி புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிப்பதாகவும், பள்ளிக்கு சென்ற பொழுது மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவர் கோவில்பட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பம் கலைக்கும் மாத்திரை உட்கொண்டதால் மயக்கம் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், இதுகுறித்து மருத்துவர்கள் சைல்டு லைனில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் சார்பில் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் தனது அம்மாவுடன் தொடர்பில் இருந்த முத்து முருகன் தன்னையும் பாலியல் தொந்தரவு செய்து சீரழித்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, குழந்தையின் தாய் முத்து செல்வி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முத்து முருகன் மீது புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் எஃப் ஐ ஆர் போடப்பட்டதோடு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் தனது மனைவியின் கள்ளக்காதலன் மூலம் தனது மகளை சீரழித்த முத்து முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்..

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related

“திண்டுக்கல்லில் காரிலிருந்து தவறி விழுந்த 50 பவுன் நகை - 150 க்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து மீட்ட போலீசார்”