தூத்துக்குடி: தூத்துக்குடி வின் பாஸ்ட் கார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பீகரை சேர்ந்த வட மாநில தொழிலாளி ராஜேஷ் (35) என்பவரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  3 வது மைல் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடை அருகில் வைத்து 3 பேர் கொண்ட கும்பல் மது போதையில் கட்டையால் அடித்து கொலை. தென்பாகம் போலீசார்  விசாரணை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  3வது மைல் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் அருகில் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அப்பகுதிக்கு விரைந்து வந்த தென்பாகம் காவல் ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தூத்துக்குடி வின் பாஸ்ட் கார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளி ராஜேஷ் (35) என்பவர் மது அருந்தும் பொழுது, அவருக்கும் அங்கே ஏற்கனவே மது அருந்தி கொண்டிருந்த மூன்று பேர் கொண்ட கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அரசு மதுபான கடையை விட்டு வெளியே வந்த வடமாநில தொழிலாளி ராஜேஷை 3 பேர் கொண்ட கும்பல் அரசு மதுபான கடை அருகே உள்ள பகுதியில் வைத்து அங்கு கிடந்த கட்டையால் எடுத்து தலையில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

மோப்பநாய் உதவியுடன் கொலையாளிகளை தேடி வரும் காவல்துறை.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் தலைமையிலான தென்பாகம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related

“இராணுவ வீரர், தந்தை இரட்டை கொலை: கைதான இருவருக்கு குண்டாஸ்!”