தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் பெற்றோர் கல்லூரிக்கு செல்ல கட்டாயப்படுத்தியதால் மனம் உடைந்த பொறியியல் கல்லூரி மாணவர் லிங்கதுரை என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதி லிங்கம். இவருக்கு மூன்று குழந்தைகள் இதில் மூத்த மகன் லிங்கதுரை நெல்லை அருகே உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். 

இந்த நிலையில் பொறியியல் கல்லூரிக்கு அடிக்கடி செல்லாமல் படிக்க விருப்பம் இல்லாமல் கிராமத்திலேயே சுற்றி திரிந்துள்ளார். இதைத்தொடர்ந்து  கல்லூரி மாணவர் லிங்க துரையை அவரது பெற்றோர்கள் கல்லூரிக்கு செல்ல வற்புறுத்தி உள்ளனர். 

இதனால் மனமுடைந்த லிங்கதுரை இன்று அதிகாலை ஆதனூர் கிராமத்தில் தங்களது தோட்டத்தில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த எப்போதும் வென்றான் காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி அருகே பெற்றோர் படிக்க வற்புறுத்தியதால் மனமுடைந்த பொறியியல் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக ‘சினேகா’ தற்கொலை தடுப்பு உதவி எண்: 044-24640050, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் (iCall Pychosocial) உதவி எண் - 022-25521111 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Related

“திண்டுக்கல்லில் காரிலிருந்து தவறி விழுந்த 50 பவுன் நகை - 150 க்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து மீட்ட போலீசார்”