கம்பம், தேனி: தேனி மாவட்டம் கம்பம் ஆங்கூர்பாளையம் சாலையைச் சேர்ந்தவர் வீரமணி (41). செங்கல் சூளை நடத்தி வரும் இவருக்கு, காளீஸ்வரி (38) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். 

வீரமணி தொழில் மற்றும் குடும்பச் செலவிற்காகப் பல்வேறு தரப்பினரிடமும், தனியார் நிதி நிறுவனங்களிலும் சுமார் ₹15 லட்சம் வரை கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.இதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியால் வீரமணி கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். 

இந்நிலையில், இன்று குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பிறகு, வீரமணியும் அவரது மனைவியும் வீட்டில் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளீஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். 

ஆபத்தான நிலையில் இருந்த வீரமணி, மேல் சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து கம்பம் தெற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல...

Related

“மது போதையில் பெற்ற தாயை பாலியல் பலாத்காரம் செய்த மகன் கைது! - கோவில்பட்டியில் நடந்த கொடூரம் ”