நெல்லையில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட பாஸ்கர் கொலை வழக்கில் மாயகிருஷ்ணன் என்ற கோபி, வினோத், மகேந்திரன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் அருகே உள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (35), பெயின்டிங் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பைக்கில் வந்த மர்மநபர்கள் பாஸ்கரை வழிமறித்து அரிவாளால் தலையை துண்டித்து கொலை செய்தனர்.

இது குறித்து தச்சநல்லூர் காவல் நிலைய போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து மணிமூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த வெள்ளபாண்டி மகன் மணிகண்டன்(23), கோபால் மகன் பொன்ராஜ்(26) ஆகிய இருவர் அரிவாளுடன் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனர். இந்நிலையில் மணிமூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த பாலையா மகன் மகாராஜன்(28), முருகன் மகன் வினோத்(28), மாயகிருஷ்ணன் என்ற கோபி(40), கட்டுடையார் குடியிருப்பைச் சேர்ந்த மகேந்திரன் என்ற வெள்ளத்துரை (28)ஆகிய 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.