மதுரை மாவட்டம் சமயநல்லூர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், இளைஞர் ஒருவர் பயங்கர ஆயுதங்களால் வெட்டிப் முகத்தை சிதைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கொலை செய்யப்பட்டவர் சமயநல்லூர் சடச்சியம்மன் நகரைச் சேர்ந்த 'குட்டிசாக்கு' என்ற சூர்யா என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது
மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய ஊராட்சி மன்றக் கட்டிடத்தில் சூர்யா மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று அவரைப் பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளது.
இதில் அவரது முகம் சிதைக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலை நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயநல்லூர் காவல் துறையினர், சூர்யாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சூர்யா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதால், முன்விரோதம் காரணமாக இந்தப் பழிக்குப் பழி கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்திலும், கொலை செய்து வீட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களைப் பற்றியும் சமயநல்லூர் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.