கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்த 60 வயது பெண்மணி. கணவனை இழந்தவர். இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் மாரிச்செல்வத்திற்கு திருமணம் ஆகி கடந்த ஓராண்டுகளாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார். மற்ற இரண்டு பிள்ளைகளும் வெளியூரில் வசித்து வருகின்றனர். மாரிச்செல்வம் மட்டும் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.
கட்டிட வேலை செய்துவரும் மாரிச்செல்வம் கோவையில் வேலை பார்த்துவிட்டு கடந்த ஐந்தாம் தேதி வீட்டிற்கு வந்துள்ளார். மது போதையில் இருந்த மாரிச்செல்வம், தனது தாயை அடித்து, உதைத்து பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அந்த பெண்மணி சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாரி செல்வத்தை கைது செய்துள்ளனர். மது போதையில் பெற்ற தாயையே மகன் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர செயல் கோவில்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.