நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி, நடிகர் சூர்யா கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகியுள்ள "கருப்பு" திரைப்படம் மே. 14 ஆம் தேதி வெளியாக விருக்கிறது.

முன்னர் வெளியான போஸ்டர்.

சூர்யாவின் கமர்சியல் படமாக இது இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சாய் அபயங்கரின் இசையமைப்பில் உருவான பாடல்கள் பெரிதாகக் கவனம் பெற்று வருகின்றன. இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "டிரைலர் தயாராகி வருகிறது. விரைவில் பரிமாறப்படும்" எனக் கூறியுள்ளார்.

Related

““வாரண்ட்” வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி முதல் ZEE 5 தளத்தில் வெளியாகிறது.”