சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி பாக்ஸ் ஆபிஸில் வேட்டையாடி வரும் திரைப்படம் கருப்பு. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, திரிஷா, இந்திரன்ஸ், அனாகா, ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் சென்சேஷனல் இசையமைப்பாளராக வலம் வரும் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த மே-15ஆம் தேதி வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது.

2026ஆம் ஆண்டின் தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டராக மாறியுள்ளது கருப்பு திரைப்படத்தின் வசூல்.
கடந்த, 21 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 21 நாட்களில் கருப்பு உலகளவில் ரூ. 321 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த டாப் 25 திரைப்படங்களில் கருப்பு திரைப்படமும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.