கோயம்புத்தூரில் கற்பகம் கிராண்ட்பிளக்ஸில், கியூப் சினிமா மற்றும் கற்பகம் குழுமம் இணைந்து (“எபிக் மற்றும் எபிக் லக்ஸ்ஆன்”) எனும் புதிய சினிமா தொழில்நுட்ப அரங்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் தமிழ்நாட்டின் முதல் எபிக் லக்ஸ்ஆன் அரங்கமும், இந்தியாவின் மிகப்பெரிய எல்இடி சினிமா திரையும் இடம்பெற்றுள்ளன.
எ.பிக் அரங்கில் 4”கே ஆர்.ஜி.பி லேசர் புரொஜெக்ஷன் தொழில்நுட்பமும், எபிக் லக்ஸ்ஆனில் நேரடி எல்.இ.டி திரை தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இரு அரங்குகளிலும் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலி அமைப்பு மற்றும் பார்வையாளர்களின் திரைப்பட அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள வசதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த புதிய தொழில்நுட்ப அரங்குகள் மூலம் கோயம்புத்தூர் பார்வையாளர்களுக்கு மேம்பட்ட காட்சி மற்றும் ஒலி அனுபவம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்பகம் குழும திரையரங்குகளின் நிர்வாக இயக்குநர் என். சிவபிரகாசம் கூறுகையில், பார்வையாளர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை வழங்கும் நோக்கில் கற்பகம் கிராண்ட்பிளக்ஸில் எபிக் மற்றும் எபிக் லக்ஸ்ஆன் அரங்குகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேம்பட்ட காட்சி மற்றும் ஒலி தொழில்நுட்பங்களுடன், தமிழ்நாட்டின் முதல் எபிக் லக்ஸ்ஆன் அரங்கையும், இந்தியாவின் மிகப்பெரிய எல்இடி சினிமா திரையையும் கோயம்புத்தூருக்கு கொண்டு வந்ததில் பெருமை கொள்வதாக அவர் கூறினார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.