சென்னை, ஆக.19-

நடிகை திரிஷா சினிமாவிலிருந்து ஓய்வு பெறப்போகிறார் என்கிற யூகச் செய்தி தற்போது அனலாக பறக்கத் தொடங்கியிருக்கிறது.

தமிழ்நாடு அரசு விழாவில் முதல் வரிசையில் அமர்ந்து சுதந்திர தினவிழாவில் பங்கேற்ற திரிஷா உலகம் முழுவதும் தமிழர்களால் பேசப்பட்டு வரும் நிலையில் அடுத்த ஹாட் டாபிக்காக அவர் சினிமாவிலிருந்து ஓய்வு பெறப் போகிறார் என்கிற செய்தி காட்டுத் தீயாக பரவத் தொடங்கியிருக்கிறது. 

தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரிஷா தான், ஒப்புக்கொண்ட திரைப்படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு, தற்காலிகமாக சினிமாவிலிருந்து ஓய்வெடுக்க முடிவெடுத்திருப்பதாக சில தகவல்கள் வெளியான நிலையில், அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை உறுதி செய்வதாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்மைக் காலங்களில் திரிஷா நல்ல கதாபாத்திரங்கள் அல்லது பேசும்படியான கதாப்பாத்திரங்களைத் தேர்வு செய்து குறைவான திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். 2025ஆம் ஆண்டு தக் லைஃப் உள்பட நான்கு திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்த ஆண்டு, சூர்யாவுடன் கருப்பு வெளியாகிவிட்டது. அடுத்து இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகலாம்.

தற்போது வரை அவர் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருவதாகவும், தமிழ்நாட்டில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு புதிதாக எந்த திரைப்படத்திலும் நடிக்க திரிஷா ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால், நடிகை த்ரிஷா சினிமா துறையிலிருந்து தற்காலிகமாக சிறிது காலம் ஓய்வெடுக்கலாம் என்று கூறப்பட்டாலும், சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சொல்வது அவர் நடிப்பிலிருந்துதான் ஓய்வெடுக்கப் போகிறார் எனக் கூறப்படுகிறது. ஆனால் தயாரிப்பில் இறங்கும் ஆர்வம் இருப்பதால், அவர் விரைவில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கலாம் என்றும் சலசலக்கப்படுகிறது.

ஆனால், அதெல்லாம் இல்லை, அவர் அரசியலில் இறங்கப் போகிறார், தமிழ்நாட்டில் இடைத் தேர்தல் நடைபெற்றால், அவர் ஒரு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுவார் என்றும், ஏற்கனவே, அரசியலில் நுழையப் போகிறார் த்ரிஷா என்று வந்த வதந்திகளுக்கு வலு சேர்ப்பதாகவே, சினிமா ஓய்வு தகவல் பரவி வருவதாகவும் சிலர் முனுமுனுக்கிறார்கள்.

உண்மை என்ன? சினிமாவிலிருந்தே ஓய்வா, தயாரிப்புத் துறைக்கு சென்று, இத்தனை ஆண்டுகள் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகை திரிஷா, தயாரிப்புத் துறையிலும் புதிய சாதனைகள் படைப்பாரா? இல்லை தமிழக மக்களின் பிரதிநிதியாக சட்டப்பேரவைக்குள் நுழைவாரா? என்று அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Related

“ONE MAN திரைப்படம் எப்படி இருக்கும்? ”