சென்னை, ஆக.1- மலேசிய தமிழரும், பிக் பாஸ் மூலம் பிரபலமானவரும், நடிகருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'நிறம்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் பல்ராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிறம்' திரைப்படத்தில் முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், நித்தின் சத்யா, சுரேகா வாணி, ஸ்ரீஜித் ரவி, அன்பு மயில்சாமி, திருநாவுக்கரசு, கஜராஜ் ,சினேகா குப்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சாண்டானியோ டெர்ஸியா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். கிரைம் இன்வெஸ்டிகேட்டட் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே ஸ்கொயர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. பிந்து மாதவி தயாரித்திருக்கிறார்.

விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு பரபரப்பான புலனாய்வு படைப்பு அனுபவம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.மேலும் இந்த திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவங்களை தழுவி எழுதப்பட்டு இருப்பதாலும் ஹைப்பர் லிங்க் பாணியில் உருவாகி இருப்பதாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.