ராஜா கருப்பசாமி இயக்கி ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.
தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி பேசுகையில், “இந்த படத்தை தயாரித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடுகின்றனர். இயக்குநர் ராஜா, ஹீரோ ரிஷிகாந்த் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். ராஜா கதை சொன்ன உடனே மிகவும் பிடித்து விட்டது. ஹவுஸ்ஃபுல்லாக எல்லா திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மற்ற மொழிகளிலும் இந்த படத்தை எடுத்துச் செல்லும் எண்ணம் இருக்கிறது. ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ படங்களை தொடர்ந்து தமிழில் இது எங்களுக்கு மூன்றாவது வெற்றி படம். இதோடு ‘இருமுடி கட்டு’ படத்தையும் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி” என்றார். ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்சோதி பேசுகையில்,”நல்ல படத்தில் வேலை செய்து இருக்கிறோம் என்று திருப்தி உள்ளது. வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”. என்றார்.


படத்தொகுப்பாளர் அசோக் அர்ஜூனன் பேசுகையில், “என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநருக்கும் நன்றி. அந்த நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறோம் என நினைக்கிறேன். என் முதல் படத்திலேயே எனக்கு பாராட்டுகள் கிடைத்து வருவது மகிழ்ச்சி”. என்றார்.


பப்ளிசிட்டி டிசைனர் வியாகி பேசுகையில், “ராஜா கதை சொன்னதிலிருந்து இது எங்களுடைய படமாகிவிட்டது. படத்தில் எல்லோருமே பாசிட்டிவாக இருந்தார்கள். அதனுடைய ரிசல்ட் பிரம்மாண்ட வெற்றியாக மாறியிருக்கிறது”. என்றார்.
நடிகை சுமித்ரா தேவி பேசுகையில், ” இந்த படத்தில் நிறைய புது முகங்கள் நடித்திருக்கிறார்கள். எங்கள் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. இயக்குநருக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”. என்றார்.
நடிகை வர்ஷினி கார்மேகம் பேசுகையில், “தயாரிப்பாளர்கள், இயக்குநர் ராஜா, ரிஷிகாந்த் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தின் வெற்றி மகிழ்ச்சியாக உள்ளது”. என்றார்.
நடிகர் திலீப் பேசுகையில், ” படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. பல நாட்கள் கழித்து திரையரங்குகளில் இருந்து குடும்பம் குடும்பமாக மகிழ்ச்சியுடன் செல்வதை பார்த்தேன். நன்றி” என்றார்.

Related

“ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்”இராவணன் சோலையில் சிவன் மலை””