கோவையில் எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெறும் *‘ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாடு 2026’*ன் 3ம் நாள் நிகழ்ச்சி, ‘எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்றது.
ஆரோக்கியம், நல்வாழ்வு, தொழில்முனைவு, உடற்பயிற்சி, பாரம்பரிய அறிவு மற்றும் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
காலை அமர்வில் இரைப்பை மற்றும் குடல் மருத்துவ நிபுணரும், ‘நியூமீ’ நிறுவனருமான டாக்டர் பால் மாணிக்கம், குடல் ஆரோக்கியம், ‘என்டெரிக் நெர்வஸ் சிஸ்டம்’ மற்றும் குடல்–மூளை தொடர்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.
தொடர்ந்து ‘இன்ஸ்பிரேஷனல் குரு விருதுகள் – உள்பிரிவு’ வழங்கப்பட்டது. இதில் பாஸ்கரன் செல்வராஜ் – உடற்கல்வி இயக்குனர், எஸ்.எஸ்.வி.எம். மேட்டுப்பாளையம்; நித்யா வி. – மூத்த உடற்கல்வி ஆசிரியை, எஸ்.எஸ்.வி.எம். விதான்; கிரிகோரி ஹாரிஸ் – உடற்கல்வித் துறைத் தலைவர், ரூஹ் கண்டினியம் பள்ளி; டாக்டர் நவீனா ராமச்சந்திரன் – உடற்கல்வித் துறைத் தலைவர், ரீட்ஸ் வேர்ல்ட் ஸ்கூல்; சாம் ஜே. மோகன் – டென்னிஸ் பயிற்சியாளர், எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்கள்; ஸ்ரீதர் வி. – உடற்கல்வி ஆசிரியர், எஸ்.எஸ்.வி.எம். வேர்ல்ட் ஸ்கூல் உள்ளிட்ட 11 பேர் கவுரவிக்கப்பட்டனர்.

இதையடுத்து ‘உடற்தகுதியின் தாளம்’ என்ற உடற்பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. தொழில்முனைவு அமர்வில், தொழில்முனைவோரும் ஏ.பி.சி. ஸ்டுடியோஸ் நிறுவனருமான சர்வேஷ் சஷி, வாய்ப்புகளை அடையாளம் கண்டு, பிரச்சனைகளுக்கு பயனுள்ள தீர்வுகளை உருவாக்குவதே உண்மையான தொழில்முனைவு என மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
பின்னர் நடைபெற்ற ‘இன்ஸ்பிரேஷனல் குரு விருதுகள் – வெளிப்பிரிவு’ நிகழ்ச்சியில் சயோனா ஆன் பால்ட்வின், அகஸ்டினா குளோரி, ராஜேஸ்வரி டி., எஸ். வேல்விழி, திவ்யா பிரியா ஆர்., பிரியா ஆர்., ஜூட் ஜெரார்ட் ரீவ்ஸ், ரம்யா எஸ்., வி. மரியா சிந்தியா, ஆஷா ஜே.பி. உள்ளிட்ட 10 கல்வியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
மதிய அமர்வில் குருக்கள் எஸ். மகேஷ், பாரம்பரிய உடற்பயிற்சி மற்றும் நற்பண்புகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து ‘உங்களுக்குள் இருக்கும் போர்வீரனைக் கண்டறிதல்’ பயிலரங்கம் நடைபெற்றது. மேலும், ஆஷ்னாவின் ‘தி பவர் ஆஃப் பிலேட்ஸ்’, ஸ்மைலியின் ‘தி ஆர்ட் ஆஃப் மூவ்மென்ட்’ பயிற்சிகளும் இடம்பெற்றன.
மாணவர் தொழில்முனைவோர் விருதுகள்
‘ஸ்டூடண்ட் ப்ரணர் விருதுகள் – உள்பிரிவு’ நிகழ்ச்சியில் மாணவர்களின் புதுமையான யோசனைகள் பாராட்டப்பட்டன. முதல் பரிசு ரூ.1 லட்சம் – ரீட்ஸ் வேர்ல்ட் ஸ்கூலின் ‘டீம் ரீ:ஜீரோ’ மாணவர்கள் தனா ஏ.ஏ., மைத்யரன் பொன்ராஜ், ஹர்ஜீத் கே.ஏ., எம். ஸ்ரீ ராம் சஹிஷ்ணு. இரண்டாம் பரிசு ரூ.75 ஆயிரம் – எஸ்.எஸ்.வி.எம். மேட்டுப்பாளையத்தின் ‘டீம் கிரெட் எக்ஸ்’ மாணவர்கள் தர்ஷன் செல்வராஜ், மிதுன் ராஜ் என்.எஸ்., மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் – எஸ்.எஸ்.வி.எம். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் மாணவர்களின் ‘டீம் மாற்றம்’ குழுவைச் சேர்ந்த ராம் சரவணன் ஏ., ரிதுன் எஸ்., விவான் வி.ஆர்., கேசவ வர்தனா கே., அஸ்வந்த் குமார் ஜே. ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
முதல் மூன்று பரிசுகளாக மொத்தம் ரூ.2.25 லட்சம் வழங்கப்பட்டது. பல மாணவர் குழுக்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. நிறைவாக எஸ்.எஸ்.வி.எம். முன்னாள் மாணவர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. தங்களது கல்வி மற்றும் வாழ்க்கைப் பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, மாணவர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஊக்கத்தை முன்னாள் மாணவர்கள் வழங்கினர். எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்களின் நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் மணிமேகலை மோகன், மாணவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு, சூழ்நிலைக்கு ஏற்ப மாறி, தங்களுக்கான சொந்தப் பாதையை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.