தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்த மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த செப்டம்பர் 27-ம் தேதி Business Conclave நிகழ்ச்சி நடைபெறுகிறது
கோவை மாவட்டம் நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி கன்வென்ஷன் சென்டரில் செப்டம்பர் 27-ம் தேதி JCI கோயம்புத்தூர் கிளாசிக் சார்பில் "VYORA 2026 Edition-1" என்ற என்ற தலைப்பில் தொழில் முனைவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த Business Conclave நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக முக்கிய பிரபலங்களான கோபிநாத், சுப்பிரமணியன்,ராமகிருஷ்ணன் மா,கா,பா ஆனந்த் உள்ளிட்டர் கலந்துகொண்டு தொழில் முனைவோர்களுக்கு தொழில் குறித்து எடுத்துரைக்கின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய JCI கோயமுத்தூர் கிளாசிக் நிர்வாகிகள்:-
27-ம் தேதி நடைபெறும் Business Conclave நிகழ்ச்சியில் 1500 பேர் பங்கேற்கின்றனர்.இந்த நிகழ்ச்சி மூலம் தொழில் முனைவர்கள் ஆக்குவது எப்படி என்றும் அவர்களுக்கு தொழில் செய்வதற்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கும் நோக்கமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவித்தனர்.
தொழில் வல்லுநர்கள் துறைச் சார்ந்த வல்லுநர்கள் தொழில் முனைவோர்களுக்கு தொழில் மற்றும் வணிகம் சார்ந்து எடுத்துரைக்கின்றனர். இந்த நிகழ்ச்சி மூலமாக பல்வேறு தொழில் முனைவர்களை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இதில் அனைவரும் கலந்து பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.