தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சியாக,அக்டோபர் 23 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு  காட்டன்  ஆடைகள், வீட்டு அலங்கார பொருட்கள், அணிகலன்கள், நகைகள், விற்பனைக்கான , நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 23,24,25 ஆகிய தேதிகளில்   மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள்  என நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, கோ க்ளாம் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல் தலைமையில் நடைபெற்ற  கண்காட்சி துவக்க விழாவில், சிறப்பு விருந்தினர்களாக, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கீர்த்தனா கார்த்திக், கவுரி, அலமேலு, மஞ்சுளா, ஜீவிதா, மஹிமா சாய் பிரியா,ஆகியோர் உடனிருந்தனர். கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஹீனா மற்றும் ராகுல் ஆகியோர் கோ கிளாம்  ஷாப்பிங் கண்காட்சி குறித்து பேசுகையில், ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கான அரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக கண்காட்சியில், பெண்களுக்கான லேட்டஸ்ட் மாடல் ஆடைகள்,  கொல்கத்தா,லூதியானா,குஜராத், டில்லி,ஜெய்ப்பூர்,புனே என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரத்யேகமாக விற்பனை செய்யபடுவதாக தெரிவித்தனர்.

மேலும் கண்காட்சியில்  ஆடை, ஆபரணங்கள், , குழந்தைகளுக்கான கைவினை பொருட்கள்,  பிரபல கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஹேண்ட் பேக்குகள்,பிரத்யேக டிசைனில் உருவாக்கப்பட்ட காலணிகள் பெண்களுக்கான, ஜிமிக்கி கம்மல், வளையல்,வெள்ளி அணிகலன்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. 

அக்டோபர் 25  ந்தேதி வரை  நடைபெற உள்ள இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்வதாக தெரிவித்தனர்.

Related

“கோவையில் பிரசன்னா கியாவின் ‘கியா சொரெண்டோ’ புதிய கார் பிரம்மாண்ட அறிமுகம்!”