கோயம்புத்தூரில் பிரசன்னா கியா சார்பில் புதிய ‘கியா சொரெண்டோ’ காரின் பிரம்மாண்ட அறிமுக விழா நடைபெற்றது.
கோல்ட்வின்ஸ், அவிநாசி சாலையில் உள்ள மெர்லிஸ் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வி. சம்பத் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கியா சொரெண்டோ காரை அறிமுகம் செய்து வைத்தார்.
விழாவில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.எஸ். ஸ்ரீகிரி பிரசாத் மற்றும் கியா இந்தியா மண்டல விற்பனை மேலாளர் திரு. கௌரவ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய கியா சொரெண்டோவின் அறிமுக விழா கோவை வாகன ஆர்வலர்கள் மற்றும் கியா வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பு கவனம் பெற்றது. நவீன வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய கார், இந்திய வாகன சந்தையில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பிரசன்னா கியா நிர்வாகிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் வாகனத் துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்ட இந்த விழா, கோவையில் புதிய கியா சொரெண்டோவின் வருகையை அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடும் நிகழ்வாக அமைந்தது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.